சீனா- கனடா இடையே நேரடி விமானச் சேவை அதிகரிப்பு

சீனா மற்றும் கனடா இடையே நேரடி விமானச் சேவையை அதிகரிப்பதற்கான பணியை இரு நாட்டு விமான நிறுவனங்கள் சமீபத்தில் தொடங்கி வைத்துள்ளன.

இரு நாட்டு பயணியர் விமானப் போக்குவரக்குத் துறைகள் பல சுற்று கலந்தாய்வு மேற்கொண்ட பிறகு நேரடி விமான சேவையை அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

டிசம்பர் 7ஆம் நாள் முதல், வான்கூவர் மற்றும் ஷாங்காய் இடையேயான நேரடி விமானச் சேவை வாரந்தோறும்  4ல் இருந்து 7ஆக அதிகரிக்கவுள்ளது. அடுத்த ஆண்டின் ஜனவரி 15ஆம் நாள், வான்கூவர் மற்றும் பெய்ஜிங் இடையேயான நேரடி விமானச் சேவை மீட்டெடுக்கப்படும். வாரந்தோறும் 7 விமானச் சேவைகள் இயக்கப்படும் என்று ஏர் கனடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, சீனாவின் விமான சேவை நிறுவனங்கள் இந்த நேரடி விமான சேவையை அதிகரிப்பதற்கு விண்ணப்பித்து கொண்டிருக்கின்றன.

 

You May Also Like

More From Author