நாளை +2 தேர்வு முடிவுகள் வெளியாகாது; புதிய தேதி மற்றும் தாமதத்திற்கான காரணங்கள்  

Estimated read time 1 min read

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து சுமார் 8 லட்சம் மாணவர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி நாளை (மே 8) தேர்வு முடிவுகள் வெளியாகாது என தகவல் வெளியானது.
தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் மாற்றங்கள் மற்றும் புதிய அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள நிர்வாகக் காரணங்களால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

மேலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்துத் தொழில்நுட்பப் பணிகளும் முடிவடைந்துவிட்ட போதிலும், முறையான அரசு ஒப்புதலுக்காகப் பள்ளிக் கல்வித் துறை காத்திருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது திட்டமிட்டபடி நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author