அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு தொடக்கம்!

Estimated read time 1 min read

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைககான பொது கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து இடங்கள் உள்ளன.

இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் நிலையில், 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பதிவு மே 7ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை நடைபெற்றது. ஆன்லைன் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த 2ஆம் தேதி தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டன.

ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், பொதுப் பிரிவினர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

கல்லூரி வாரியாக வரும் 18ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், ஜூலை 1ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2 மற்றும் 3ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 15ஆம் தேதி தொடங்கும் எனவும் கூறியுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author