ஐ.நாவின் சில தொடர்புடைய நிபுணர்கள் வெளியிட்ட “சின்ஜியாங் மற்றும் ஷிச்சாங்கில் கட்டாய உழைப்பு” பற்றிய கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகூன் ஜனவரி 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், மனித உரிமையை முன்னேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் சீன அரசு பாடுபட்டு வருகிறது. சின்ஜியாங் மற்றும் சிட்சாங்கின் வளர்ச்சி அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். குறிப்பிட்ட சில நிபுணர்களின் கூற்றுக்கு ஆதாரம் ஏதுமில்லை என்றார். மேலும், இந்நிபுணர்கள் அடிப்படை உண்மைகளுக்கு மதிப்பளித்து, நேர்மையாகவும் சரியாகவும் கடமைகளை நிறைவேற்றி, சீனாவுக்கு எதிரான சக்திகளின் துணைக் குற்றவாளியாக மாறக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
சின்ஜியாங் மற்றும் ஷிச்சாங் பற்றிய தவறான கூற்றுக்கு சீனா எதிர்ப்பு
You May Also Like
சீன-கம்போடிய-தாய்லாந்து வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை வெற்றி
December 29, 2025
இவ்வாண்டின் முற்பாதியில் சிட்சாங் பொருளாதாரம் அதிகரிப்பு
July 21, 2026
சீன ஊடகக் குழுமத்துக்கு கியூபா அரசுத் தலைவர் சிறப்புப் பேட்டி
September 27, 2025
