ஆளுநரின் கேரள பயணம் ரத்து!

Estimated read time 0 min read

புதிய அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இன்று இரவு ஆளுநர் அர்லேகர் கேரளத்திற்கு செல்லவிருந்த நிலையில், தற்போது அவரின் பயணம் ரத்தாகியுள்ளது.

த.வெ.க தலைவர் விஜய் மூன்று முறை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. இப்போது விசிகவின் ஆதரவோடு ஆளுநரை மீண்டும் சந்திக்க விஜய் திட்டமிட்டு வரும் நிலையில், ஆளுநர் அர்லேக்கர் இன்று இரவு 7:10 மணிக்கு கேரளாவுக்கு செல்ல விமானத்தில் டிக்கெட் புக் செய்திருக்கிறார். ஆளுநரின் பயணத்திட்டத்தை ஒட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் புதிய அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இன்று இரவு ஆளுநர் அர்லேகர் கேரளத்திற்கு செல்லவிருந்த நிலையில், தற்போது அவரின் பயணம் ரத்தாகியுள்ளது.

You May Also Like

More From Author