அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Estimated read time 1 min read

நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இன்று அதிகாலை 2 ஆயிரத்து 324 பேர் தரிசனம் செய்யச் சென்றுள்ளனர். அதேவேளை, நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை வரும் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பனி லிங்கத்தைத் தரிசிக்க இன்னும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் 5 லட்சத்து 10 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author