சௌதி அரேபிய இளவரசரும் தலைமை அமைச்சருமான முகம்மது 14ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரான ரியாதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீயைச் சந்தித்துரையாடினார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடனான ஆழ்ந்த நட்புறவுக்கும் இரு நாட்டு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கும் சௌதி அரேபிய தலைவர்கள் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளதாக இச்சந்திப்பின் போது முகம்மது தெரிவித்தார். சீனாவுடன் இணைந்து இரு நாட்டுறவை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும், எண்ணெய் மற்றும் எரிவாயு, புதிய எரியாற்றல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளிலுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்கவும் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அடுத்தாண்டில் நடைபெறவுள்ள 2ஆவது சீன-அரேபிய நாடுகள் உச்சிமாநாட்டில் இளவரசர் முகம்மது பங்கேற்க சீனாவுக்கு வருவதை வரவேற்பதாக வாங்யீ தெரிவித்தார்.
மேலும், சௌதி அரேபியாவின் வளர்ச்சிப் பாதையிலுள்ள மிக நம்பத்தக்க சார்ந்திருக்கத்தக்க கூட்டாளியாக சீனா விளங்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
