விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே சிவில் சட்டம்: அறிவித்த பிரதமர்  

சர்தார் வல்லபாய் படேலின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் கொண்டாட்டங்களுக்காக ஒரு மெகா நிகழ்வு நடைபெற்றது.
இதற்காக பிரதமர் மோடி குஜராத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.
“இந்த முறை தேசிய ஒற்றுமை தினம் ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வைக் கொண்டு வந்துள்ளது. இன்று நாம் ஒற்றுமையின் பண்டிகையைக் கொண்டாடுகிறோம், மறுபுறம் இது தீபாவளி பண்டிகையாகும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

You May Also Like

More From Author