சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10.00 மணிக்கு தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார்.விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழா நிகழ்விடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று காலை விஜய் முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்று விஜய் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், வரும் 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விஜய் பதவியேற்பு விழா சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
கீழ்காணும் இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
1. அண்ணா நகர் டவர் பார்க்
2. வடபழனி பேருந்து நிலையம்,
3.சோளிங்கநல்லூர் சந்திப்பு ,
4. நாகேஸ்வரா பார்க்
5. சென்ட்ரல் ரயில் நிலையம்
6. பெசன்ட் நகர்
7. கத்திப்பாரா ஜங்ஷன்
8. தீவு திடல்
9. அண்ணா நகர் டேங்க்.
10.மெரினா பீச்
11. கோயம்பேடு
12.தி.நகர்
13.திருவான்மியூர் பஸ் டிப்போ
14.செம்மொழி பூங்கா
15.சோழிங்கநல்லூர் ஜங்ஷன்
16.மாதவரம் பஸ் டெர்மினல்
17.போரூர்
18.அம்பத்தூர்
19.தண்டையார்பேட்டை
20.அடையார் டிப்போ
சென்னையில் 20 இடங்களில் LED TV வாயிலாக நேரடி ஒளிபரப்பு!
நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு செல்ல இயலாதோர், இவ்விடங்களில் இருந்து கண்டு மகிழவும்! pic.twitter.com/8jwBTQ9PN7
— Dharshini S (@Dharshini_tvk) May 9, 2026
