சீன ஊடகக் குழுமமும் பிரேசிலுக்கான சீனத் தூதரகமும் கூட்டாக நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’எனும் உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி, உள்ளூர் நேரப்படி, மார்ச் 18ஆம் நாள் பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்றது.
இதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங், அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் பாடிலியா ஆகிய இருவரும் காணொளியின் மூலம் உரைநிகழ்த்தினர்.
அந்நாட்டிற்கான சீனத் தூதர் சு சிங்சௌ, பிரேசில் அரசு மாளிகையின் வாரிய உறவுப் பிரிவின் செயலாளர் கொனொபாக்கி, அரசு மாளிகையின் பொதுச் செயலகத்தைச் சேர்ந்த தேசிய இளைஞர் அமைப்புச் செயலாளர் அலுவலகத்தின் அரசவைச் செயலாளர் ரனுயினோ, பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரேசில்-சீன நட்புறவு குழுவின் தலைவருமான அல்மேடா, பிரேசில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு முன்னேற்ற வாரியத்தின் தலைவர் வியனா முதலியோரும் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் அந்நாட்டின் அரசியல், கல்வி, செய்திஊடகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சுமார் 120 விருந்தினர்கள் பங்கேற்றனர்.
சீன ஊடகக் குழுமத்தின்(சி.எம்.ஜி) தலைவரான ஷென் ஹாய்சியோங் காணொளி வழியிலான தன்னுடைய உரையில், சீனா, உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பு அளவையும் உலகச் சந்தையையும் விரிவாக்கி, சர்வதேச சுழற்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சமீபத்தில் மீண்டும் வலியுறுத்தியதையும், இதன் மூலம் வெளிநாட்டுத் திறப்புக்கான சீனாவின் மன உறுதி மீண்டும் வெளிகாட்டப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். மேலும், அறிவியல் தொழில் நுட்பம், செய்தி ஊடகம் உள்ளிட்ட மேம்பாடுகளை சி.எம்.ஜி பயன்படுத்தி, சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தைக் கொண்டு உலகத்திற்கு நன்மை தர பாடுபடும் எனக் குறிப்பிட்ட அவர், உயர் தர வளர்ச்சி கொண்டு வரும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைச் சீனா, உலகளாவிய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
