சென்னையில் 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்  

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சோதனை அடிப்படையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பரங்கிமலையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) இரவு 11 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவை வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author