தகாய்ச்சி மண்டியிட்டு அஞ்சலி செலுத்தியதற்குப் பிந்தைய சதிகள்

ஜப்பான் தலைமை அமைச்சர் தகாய்ச்சி சனாய் கடந்த சில நாட்களாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

அமைதி அரசியல் அமைப்பு சட்டத்தின் திருத்தத்தை முன்னேற்றுவது, பேரழிவு ஆயுதங்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவது போன்ற ஆதரவு பெறாத அவரது செயல்களுக்கு எதிராக ஜப்பானில் பெருமளவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறு இராணுவமயமாக்கலை ஜப்பான் விரைவுபடுத்துவது பிரதேச நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று சீனா, ரஷியா, தென் கொரியா உள்ளிட்ட அதன் அண்டை நாடுகள் விமர்சித்துள்ளன. சமீபத்தில் தகாய்ச்சி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்ட போது கான்பெர்ராவிலுள்ள போர் நினைவகத்தில் மண்டியிட்டு மலர் அஞ்சலி செலுத்தினார். இந்த நடிப்பு மூலம், அவரது பல அரசியல் சதிகள் பற்றி சர்வதேச சமூகம் மேலும் தெளிவாக அறிந்து கொண்டுள்ளது.

குறிப்பிட்ட இடங்களில் மண்டியிடுதலைத் தெரிவு செய்த தகாய்ச்சி 2ஆவது உலகப் போரின் போது தனது ஆக்கிரமிப்பு குற்றத்துக்காக ஜப்பான் வருந்தி மன்னிப்பு கோருவது அல்ல. அவரது இச்செயல், ஜப்பானிய அரசியல்வாதிகளின் திரிந்த உலக கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதோடு, தூதாண்மை நெருக்கடியில் ஆக்கிரமிப்பு குற்றத்திலிருந்து தன்னை விலக்குவது, கூட்டணி நாடுகளுக்கிடையே மோதலைத் தூண்டுவது, தனது இராணுவத்தை வலுப்படுத்தி ஆயுதச் சக்திகளை விரிவாக்குவது உள்ளிட்ட பல சதிகளை அவர்கள் செய்து வருவதையும் வெளிப்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author