2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீனப் பொருளாதாரம் நிலைப்புத் தன்மையுடன் தொடர்ந்து சீராக வளர்ந்து வருகிறது. அக்டோபரில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் மேல் வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூடுதல் மதிப்பு கடந்த ஆண்டை விட, 4.9விழுக்காடு அதிகரித்துள்ளது.
நாடளவில் சேவைத் துறையின் உற்பத்திக் குறியீடு 4.69 விழுக்காடு அதிகமாகும். சமூக நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனைத் தொகை 4லட்சத்து 62ஆயிரத்து 910கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டை விட, 2.9விழுக்காடு அதிகரித்துள்ளது.
மேலும், இம்மாதத்தில் சீனச் சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை 3லட்சத்து 70ஆயிரத்து 280கோடி யுவானைத் தாண்டி 0.1விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
