14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரின் சியாங்சூ பிரதிநிதிக்குழுவின் பரிசீலனையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 5ஆம் நாள் மாலை கலந்துகொண்டார்.
உயர்தர வளர்ச்சியை முதல் கடமையாக உறுதியுடன் கடைபிடித்து செயல்பட்டு, உள்ளூர் நிலைமைகளின்படி புதிய தர உற்பத்தி திறன்களை வளர்க்க வேண்டும். புதிய சுற்று தொழில் நுட்ப புரட்சி மற்றும் தொழில் வளர்ச்சி மேம்பாட்டை எதிர்கொண்டு, வாய்ப்புகளைப் பயன்படுத்தி புத்தாக்கத்தை அதிகரித்து, புதிதாக வளர்ந்து வரும் தொழில்களை வளர்த்து, முன்கூடியே எதிர்காலத் தொழிலின் கட்டுமானத் திட்டத்தை வகுத்து, நவீனமயமாக்க தொழில் அமைப்பு முறையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தவிரவும், ஜியாங்சூ மாநிலப் பிரதிநிதிக் குழு உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த ஷிச்சின்பிங், ஜியாங்சூ மாநிலம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் படைத்த சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.