ஏபெக் அமைப்பின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் மே 22, 23 ஆகிய நாட்களில் சீனாவின் சூஜோ நகரில் நடைபெற உள்ளது என்று சீன வணிக அமைச்சகம் 9ஆம் நாள் நடத்திய கூட்டத்தில் தகவல் வெளியிட்டது.
வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தை பிரதிநிதியும் துணை அமைச்சருமான லீ சேங்காங் கூறுகையில், திறந்த, கணிக்கக் கூடிய பிரதேச மற்றும் பலதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கை உருவாக்குவது, புத்தாக்கம் மற்றும் உயிராற்றல் மிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்கான புதிய விசைப்பொறியை கட்டமைப்பது ஆகிய 2 கருப்பொருட்களில் ஒத்த கருத்துக்களை உருவாக்க சீனா ஏபெக் அமைப்பின் பல்வேறு தரப்புகளுடன் இணைந்து பாடுபடும் என்று தெரிவித்தார்.
மேலும், தனது திறப்புடன் பிரதேச திறப்பை ஊக்குவிக்கவும், தனது வளர்ச்சியுடன் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் புத்தாக்க வளர்ச்சியை முன்னேற்றவும், கூட்டு வெற்றி பெறக் கூடிய ஒத்துழைப்புடன் இப்பிரதேசத்தின் கூட்டு செழுமையை மேம்படுத்தவும் சீனா விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
