#BREAKING : அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க – பிரதமர் மோடி..!!

Estimated read time 1 min read

ஈரான் – அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் வணிக சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த சூழலில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:-

மேற்காசிய போர் தாக்கத்தை எதிர்கொள்ள, அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பொதுமக்களை PM மோடி வலியுறுத்தியுள்ளார்.

கடினமான பொருளாதார சூழ்நிலையில் நாட்டின் வளங்களை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வது (WFH), ஆன்லைன் மீட்டிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற முறைகளுக்கு மக்கள் எளிதாக பழகி விட்டனர். எரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த இதேபோன்ற ஒரு நடைமுறையை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும். சேமிக்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா அந்நிய செலவாணி செலவிடுதை குறைக்கும்” என்றார்.

பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தாமல், அதன் சுமையை அரசு தாங்கிக் கொண்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க நகரவாசிகள் மெட்ரோ, மின்சார வாகனங்களை பயன்படுத்துங்கள். வாய்ப்பிருந்தால் WFH செய்யுங்கள், வெளிநாட்டு பயணத்தை தவிருங்கள் என அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author