சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் நடத்திய பொது மக்கள் கருத்து கணிப்பின்படி, சீனப் பொருளாதாரம் தொடர்ந்து ஒட்டுமொத்த அளவில் நிதானமாக வளர்ந்து வருவது, உலகப் பொருளாதாரத்திற்கு உறுதிப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது என்று கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களுள் பெரும்பாலானோர் தெரிவித்தனர்.
புதிதாக வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டு உலகப் புத்தாக்க குறியீட்டுப் பட்டியலில் சீனா முதன்முறையாக முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. இக்கணிப்பின்படி, சீனப் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சியில் புத்தாக்கம் பங்காற்றும் வேகம் தொடர்ந்து அதிகரித்துள்ளது என்று கரத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 93.6 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
பெருமளவு கொண்ட சீனச் சந்தையில், மேம்பாடுகளையும் ஆற்றல்களையும் முழுமையாக பயன்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள், உலகளாவிய போட்டியில் முன்னதாகவே நன்மைகளைப் பெற முடியும் என்று 82.3 விழுக்காட்டு கருத்து தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டுத் திறப்புப் பணியை சீனா தொடர்ந்து விரிவாக்குவது, உலகத்திற்கு மேலதிகமான வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டு வரும் என்று 89.1 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
