தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

Estimated read time 0 min read

தெலங்கானா மாநிலத்தில் ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது பாரம்பரிய ஜவுளித்தொழிலை வலுப்படுத்தி வருவதாகவும், வாரங்கலில் அமையவுள்ள பிரதமர் மித்ரா பூங்கா, நாட்டில் ஜவுளிப் புரட்சியை வேகப்படுத்தும் என்றும், மத்திய அரசின் திட்டங்களின் முழு பலன்களையும் பெறும் என்றும் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தெலங்கானாவிற்கு ஐந்து வந்தே பாரத் ரயில்களும், ஆறு அம்ரித் பாரத் ரயில்களும் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

You May Also Like

More From Author