எஸ்.பி வேலுமணி தலைமையில் தனி அணி ?; தீவிர ஆலோசனை

Estimated read time 1 min read

சென்னையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்ஏக்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அதிமுக தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமியே பொதுச்செயலாளராக தொடர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதாகவும் தெரிகிறது.

சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் திங்கட்கிழமை பதவி ஏற்க உள்ள நிலையில், சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அணி திரள்வதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

You May Also Like

More From Author