அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

Estimated read time 0 min read

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை, கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்ய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று பொதுச்செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்வாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.

You May Also Like

More From Author