உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு..!!

Estimated read time 0 min read

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உளமாற எனக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டு எம்எல்ஏவாக பதவியேற்றார்.

முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் எம்எல்ஏவாக கடவுள் அறிய எனக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக பதவியேற்றார். அப்போது அவர் கடவுள் அறிய என கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

திமுக மற்றும் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். அனிதா ராதாகிருஷ்ணன், இசக்சி சுப்பையா, கே.பி.அன்பழகன், சி.வெ.கணேசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கருப்பணன், சக்கரபாணி, எஸ்.எஸ். சிவசங்கர், சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி, கோவி செழியன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, தளவாய் சுந்தரம், நத்தம் விஸ்வநாதன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author