சென்னையில் 75 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு  

Estimated read time 0 min read

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் டித்வா புயல் சென்னையை நெருங்கும்போது, புயலாகவே நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக, சென்னையில் சனிக்கிழமை (நவம்பர் 29) மணிக்கு 75 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விட்டுவிட்டு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, சனிக்கிழமை இரவு முதல் கனமழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை படிப்படியாக டிசம்பர் 1 ஆம் தேதி முதல் குறையத் தொடங்கும்.

You May Also Like

More From Author