சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அழைப்பின் பேரில், பிரேசில் அரசுத் தலைவர் லூலாவுடன் 12ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,
சீன-பிரேசில் உறவு வரலாற்றில் மிக சிறந்த காலக்கட்டத்தில் உள்ளது. இரு தரப்புகளின் பொது சமூகத்தின் கட்டுமானம், இரு நாடுகளின் வளர்ச்சி நெடுநோக்குத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவை தடையின்றி முன்னேறி வருகிறன. பிரசேலுடன் சேர்ந்து, வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கி, ஒருங்கிணைப்புத் துறையில் பணியை வலுப்படுத்தி, பரஸ்பர ஒத்துழைப்புச் சாதனைகளை உருவாக்கவும், உலகின் தெற்குலக நாடுகளில் ஒன்றுபட்டு தன்வலிமைப்படுத்தும் முன்மாதிரியை நிறுவி, மேலும் நியாயமான உலகத்தை உருவாக்கி, தொடரவல்ல வளர்ச்சியை கட்டியமைக்கவும் கூட்டாக முயற்சி செய்ய வேண்டும் என சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
லூலா கூறுகையில்,
சீனாவுடனான உறவில் பிரேசில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் நெடுநோக்குத் திட்டத்தின் தொடர்பை ஆழமாக்கி, இரு தரப்புறவின் மேலதிகமான வளர்ச்சியை விரைவுபடுத்த பிரேசில் பாடுபடும் என்றார்.