விஜய்க்கு நமது பிரச்சனை நன்றாக தெரியும்”- விஷாலுக்கு அருண்விஜய் பதிலடி

Estimated read time 1 min read

முதலில் மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்று, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதன் பிறகு நீங்கள் நினைப்பதைச் செய்யுங்கள் என நடிகர் விஷாலுக்கு அருண் விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.

முப்பதாண்டுகளாகத் திரையுலகில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்த முதல்வர் விஜய்யே இந்தத் துறையைத் தன் வசம் வைத்திருக்காமல், எந்தவொரு சினிமா அனுபவமும் இல்லாத, அண்மையில் போலி சான்றிதழ் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜ்மோகனிடம் திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் சினிமா சட்டத்துறையை ஒப்படைத்திருப்பது ரத்தக் கண்ணீர் வடிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஏமாற்றமே என்று விஷால் எக்ஸ் தளத்தில் புலம்பியுள்ளார்.

நடிகர் விஷால் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் அருண் விஜய், “முதலில் மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்று, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதன் பிறகு நீங்கள் நினைப்பதைச் செய்யுங்கள்; அதுவரை மற்றவர்களின் முடிவுகளில் தயவுசெய்து தலையிடாதீர்கள்” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் இதே திரையுலகில் இருந்து வந்தவர் என்பதால் நமது பிரச்சினைகள் என்னவென்று அவருக்கு நன்றாகவே தெரியும் என்றும், அவர் நிச்சயம் நமக்கு நல்லதொரு தீர்வை வழங்குவார் என்பதால் அவரது முடிவுகளுக்கு மதிப்பளித்து அதன் முடிவுகளுக்காகக் காத்திருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எடுத்த உடனே எதற்கும் ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள அருண் விஜய், திரையுலகின் நன்மைக்காக நல்லதே நடக்கும் என நம்புவோம் என்று விஷாலுக்குப் மறைமுகமாகப் புத்திமதி புகட்டியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author