சீனாவில் ஜி ஜின்பிங்குக்கு அடுத்த அதிகார மையம் இவர்தானா…? ஒரே நபரிடம் குவிந்த 3 முக்கியப் பொறுப்புகள்… ராணுவத்தில் என்ன நடக்கிறது…? 

Estimated read time 0 min read

சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்நாட்டு ராணுவத்தின் துணைத் தலைவராக உள்ள ஜாங் ஷெங்மினை, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயரிய கொள்கை முடிவெடுக்கும் அமைப்பான அரசியல் குழுவின் உறுப்பினராக நியமித்துள்ளார். பொதுவாக இந்தக் குழுவின் உறுப்பினர்கள் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அடுத்த மாநாடு 2027ஆம் ஆண்டு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கட்சியின் வழக்கமான நடைமுறையிலிருந்து மாறுபட்ட முடிவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நியமனத்தின் மூலம் ஜாங் ஷெங்மினின் அதிகாரமும் செல்வாக்கும் மேலும் அதிகரித்துள்ளது. தற்போது சீன ராணுவத்தில் துணைத் தலைவர் பதவியையும், அரசியல் குழு உறுப்பினர் பதவியையும் வகிக்கும் ஒரே ஜெனரலாக அவர் உள்ளார். சீன ராணுவத்தின் ஒழுங்கு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பும் ஏற்கெனவே அவரிடம் உள்ளது. கடந்த ஓராண்டில் சீன ராணுவத்தின் ஏழு ஜெனரல்களில் ஐந்து பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்தியக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1958ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷான்சி மாகாணத்தில் பிறந்த ஜாங் ஷெங்மின், தனது 20 வயதில் சீன ராணுவத்தில் இணைந்தார். 2010ஆம் ஆண்டு நிலநடுக்க மீட்புப் பணிக்குழுவுக்குத் தலைமை தாங்கியதன் மூலம் அவரது வளர்ச்சி வேகம் பெற்றது. ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருக்குப் பல்வேறு பதவி உயர்வுகள் கிடைத்தன. ராணுவத்தில் ஊழலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜின்பிங் அவரை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராக நியமித்தார். அந்தப் பொறுப்பில் இருந்தபோது ஏழு ஜெனரல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், முன்னாள் ராணுவத் துணைத் தலைவர் ஜாங் யூக்ஸியாவும் பதவியை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது 67 வயதாகும் ஜாங் ஷெங்மின், சீன ராணுவத்தின் துணைத் தலைவர் பதவியில் தனித்து உள்ளார். பொதுவாக இந்தப் பதவியில் இரண்டு பேர் இருப்பார்கள். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அவர் மட்டுமே அந்தப் பொறுப்பில் நீடித்து வருகிறார். இந்நிலையில், அரசியல் குழுவிலும் அவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளதால், சீன ராணுவத்தில் மட்டுமின்றி ஆளும் கட்சியின் முடிவெடுக்கும் அமைப்பிலும் அவரது செல்வாக்கு அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author