ஏப்ரல் திங்களில் சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு

சீனாவின் வாகன தொழில் துறையின் மின்மயமாக்கல், புத்தாக்கமயமாக்கல் முதலியவை மேலும் விரைவாக முன்னேற்றி வருகிறன.

புதிய தரவுகளின்படி, ஏப்ரல் திங்களில், புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி அளவு 13 இலட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளதோடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.5 விழுக்காடு உயர்ந்துள்ளது. புதிய எரியாற்றல் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 13 இலட்சத்து 44 ஆயிரமாக இருப்பதோடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 9.7 விழுக்காடு உயர்ந்துள்ளது. புதிய வாகனங்களின் விற்பனையில் புதிய எரியாற்றல் வாகனங்களின் பங்கு 53.2 விழுக்காட்டை எட்டியுள்ளது. இக்காலக்கட்டத்தில் 4 இலட்சத்து 30 ஆயிரம் புதிய எரியாற்றல் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.1 மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author