சீனாவில் அண்மையில் நடைபெற்ற மத்திய நகரப்புறப் பணி மாநாட்டில், சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், மக்களின் நவீன நகரங்கள் எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தார்.
சீனாவின் நகரப்புற மயமாக்கலின் அதிகரிப்பு வேகம், நிலையான மேம்பாட்டு காலத்துக்கு மாறி வருகின்றது. இப்போது தான், புதுமையான, வாழ்வதற்கு ஏற்ற, அழகான, மீள்தன்மை கொண்ட, பண்பாடு ரீதியாக மேம்பட்ட மற்றும் அறிவார்ந்த மக்களின் நவீன நகரங்களை நிர்மாணிக்க வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு முன்வைத்தது.
பெரிய மற்றும் சிறிய நகரங்களுக்கிடையே உழைப்புப் பிரிவினை மூலம் ஒத்துழைத்து, ஒன்றின் ஒன்று மேம்பாடுகளைப் பயன்படுத்தி, ஒரு சீரான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும்.
இது, பெரிய நகரில் வாகன நெரிசல், சற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பிரச்சினைகளை களைய துணைபுரிவதோடு, ஒட்டுமொத்த மண்டலத்தில் உள்ள மக்கள் அனைவரையும் வசதியான நகரப்புற வாழ்க்கைக்கு மாற்ற வழிசெய்யும்.
நகர மயமாக்கல் கட்டுமானத்தில், ஒவ்வொரு நகரங்களின் “பாரம்பரிய பாணி” மற்றும் “பண்பாட்டு வேர்” போன்ற அம்சங்களை செவ்வனே பாதுகாக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் இம்மாநாட்டில் வலியுறுத்தினார்.
சு ட்சோ நகரின் பிங் ஜியாங் சாலையில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான தெருகள், நவீன வாழ்க்கையுடன் சரியாக இணைந்த காட்சியானது, மக்களின் நகரங்களின் கட்டுமானம் பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்தின் உண்மையான சித்தரிப்பாகும்.
இந்த நடைமுறைகள், ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்த நகரப்புற மக்களின் சிறந்த வாழ்க்கையை பராமரிப்பது மட்டுமல்லாமல், 5ஜி நுண்ணறிவு நகரங்களுடன் பின்னிப்பிணைந்த பின், கீழை நாட்டு பாணி.சன் கூடிய நகரப்புற பண்பாட்டுச் சூழலை உருவாக்கியுள்ளது.