சென்னை விஜிபியில் ராட்டினம் விபத்து

Estimated read time 1 min read

சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள VGP பொழுதுபோக்கு பூங்காவில் சீட் பெல்ட் அணிவதற்குள் ராட்டினத்தை இயக்கியதால் கல்லூரி மாணவி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

சென்னை ஈசிஆர் அருகே இயங்கி வரும் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் விபத்துக்கு பஞ்சமில்லை. அடிக்கடி அங்கு விபத்து நடப்பது வழக்கம். கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஜிபி ராட்சத ராட்டினத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதில் சாகச பயணம் மேற்கொண்ட 30க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரமாக அந்தரத்தில் தவித்தனர். பாதிக்கப்பட்டவர்களை பல மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர்.

இந்நிலையில் சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள VGP பொழுதுபோக்கு பூங்காவில் சீட் பெல்ட் அணிவதற்குள் ராட்டினத்தை இயக்கியதால் கல்லூரி மாணவி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

Rock & Roll ராட்டினத்தை அஜாக்கிரதையாக இயக்கியதற்காக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

You May Also Like

More From Author