வேலுமணி, சண்முகத்தை நேரில் சந்திக்கும் முதல்வர் விஜய்!

Estimated read time 1 min read

தமிழக அரசியலில் இன்று காலை அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக கோட்டை வட்டாரமே அதிரும் வகையில் ஒரு முக்கிய சந்திப்பு அரங்கேற உள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை எம்.ஆர்.சி (MRC) நகரில் உள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இன்று காலையில்தான் சி.வி. சண்முகம் தலைமையிலான 24 அதிமுக எம்.எல்.ஏ-க்கள், தவெக அரசுக்குத் தங்களது முழு ஆதரவை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author