“விவசாயிகளுக்கு 317 கோடி.. 2 வாரத்துல கிடைக்கணும்!” அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட ‘கறார்’ உத்தரவு..!! 

Estimated read time 0 min read

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், விவசாயிகளின் நலனுக்காக இன்று (மே 12) மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பிரதிநிதிகள், முதலமைச்சரை நேரில் சந்தித்து உருக்கமான கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு வந்து சேர வேண்டிய சுமார் ரூ.317 கோடி நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு அவர்கள் கொண்டு வந்தனர்.

விவசாயிகளின் கஷ்டங்களைக் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், “விவசாயிகள் கண்ணீர் விடக்கூடாது” எனத் தெரிவித்ததுடன், அடுத்த 2 வாரங்களுக்குள் அந்த முழுத் தொகையையும் பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தலைமைச் செயலகத்திலேயே வைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். முதலமைச்சரின் இந்த மின்னல் வேகச் செயலால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author