ஜி 20 அமைப்பின் 19ஆவது உச்சிமாநாட்டின் 2ஆவது காலக்கட்டத்தில் கலந்துகொண்ட ஷிச்சின்பிங்

ஜி 20 அமைப்பின் 19ஆவது உச்சிமாநாட்டின் 2ஆவது காலக்கட்டத்தில் கலந்துகொண்ட ஷிச்சின்பிங்

நவம்பர் 18ஆம் நாள் பிற்பகல், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்றுள்ள ஜி 20 அமைப்பின் 19ஆவது உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கலந்துகொண்டார். இந்த உச்சிமாநாட்டின் 2ஆவது காலக்கட்டத்தில் உலக நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் என்பது விவாதிக்கப்பட்டது.

இதில், நேர்மையான, நியாயமான,  உலக நிர்வாக அமைப்புமுறையைக் கூட்டாக  உருவாக்குவது என்ற தலைப்பில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில்,
இந்த உச்சிமாநாடு 16 ஆண்டுகள் வரலாறுடையது. புதிய தொடக்கப் புள்ளியில், மனித குலத்தின் பொது எதிர்கால சமூகம் எனும் கண்ணோட்டத்தைப் பின்பற்றி, நியாயமான, ஒழுங்கான உலகத்தின் பலதரப்புவாதத்தையும் சகிப்புத் தன்மை வாய்ந்த பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்.
முதலில், உலக பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்தி, ஒத்துழைப்பு தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க வேண்டும். 2ஆவது, உலக நிதி நிர்வாகத்தை ஆழமாக்கி, நிதானம் வாய்ந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். 3ஆவது, உலக வர்த்தக நிர்வாகத்தை மேம்படுத்தி, திறப்பு தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

4ஆவது, உலக எண்ணியல் நிர்வாகத்தை ஆழமாக்கி, புதிய ரக உலகப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க வேண்டும். 5ஆவது, உலக சுற்றுச் சூழல் நிர்வாகத்தை முழுமைபடுத்தி, சுற்றுச் சூழலுக்கு நன்மை தரும் உலகப் பொருளாதாரத்தை நிறுவ வேண்டும் என்றார்.
அமைதியான வழிமுறையின் மூலம் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எல்லா முயற்சிகளுக்கும் ஐ.நா மற்றும் ஐ.நா பொது பேரவை முக்கிய பங்காற்றுவதற்கு ஜி 20 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
ஜி 20 அமைப்பின் ரியோ டி ஜெனிரோ உச்சிமாநாட்டு அறிக்கை இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

You May Also Like

More From Author