திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அருகே புதுமை கிராமத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் (47) என்பவர், தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைக் கழக செயலாளராக இருந்து வந்தார்.
தீவிர விஜய் ரசிகரான இவர், தனது தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 16 அடி நீளமுள்ள வேலை உடலில் அலகாகக் குத்திக் கொண்டு தனது தீவிரப் பற்றை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், அரசியல் சூழல்களால் விஜய் முதலமைச்சர் ஆக முடியாத நிலை நிலவுவதாகக் கருதி கடந்த சனிக்கிழமை இசக்கியப்பன் மனமுடைந்து காணப்பட்டார். இதன் உச்சக்கட்டமாகத் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். பலத்த காயங்களுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தவெக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
