சீன ஊடகக் குழுமத்தின் தலைவர்-ரஷிய பண்பாட்டுத் துறை அமைச்சர் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷேன் ஹெய்சியுங் 19ஆம் நாள் பெய்ஜிங்கில் ரஷிய பண்பாட்டு துறை அமைச்சர் லியுபிமோவா அம்மையாரைச் சந்தித்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், சீன-ரஷிய நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவாகவும், சீன-ரஷிய அண்டை நாட்டு நட்புறவு உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவாகவும் இவ்வாண்டு திகழ்கின்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் ரஷிய அரசுத் தலைவர் புத்தினின் நெடுநோக்கு வழிகாட்டலில், பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளில் இரு நாடுகள் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளன. திரைப்பட துறையில் இருதரப்பும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கியுள்ளன. சீனா நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஷியா கலந்து கொள்வதை வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author