வட கொரிய அதியுயர் தலைவர் வாங்யீயுடன் சந்திப்பு

Estimated read time 1 min read

வட கொரிய தொழிலாளர் கட்சியின் பொது செயலாளரும் தேசிய அலுவல் கமிட்டித் தலைவருமான கிம் ஜோங் உன் 10ஆம் நாள் பியொங்யாங்கிலுள்ள தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டி தலைமையகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீயைச் சந்தித்துரையாடினார்.

பொது செயலாளர் கிம் ஜோங் உன்னுக்கான சீனப் பொது செயலாளர் ஷிச்சின்பிங்கின் வணக்கத்தை வாங்யீ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டின் செப்டம்பரில், பொது செயலாளர் ஷிச்சின்பிங், கிம் ஜோங் உன்னுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையை நடத்தினார். சீன- வட கொரிய உறவுக்கு நெடுநோக்கு தன்மை வாய்ந்த வழிக்காட்டலை வழங்கி இரு நாட்டுறவின் புதிய நிலைமையின் துவக்கத்தையும் முன்னேற்றினார். சீனா, வட கொரியாவுடன் இணைந்து, இரு நாட்டு கட்சி மற்றும் தலைவர்களின் முக்கிய பொது கருத்துக்களைக் கூட்டாக நடைமுறைப்படுத்த விரும்புகிறது என்றும், ஒன்றுக்கு ஒன்று பரிமாற்றங்களை நெருக்கமாக்கி பயனுள்ள ஒத்துழைப்பை முன்னேற்றி இரு நாடுகளின் பாரம்பரிய நட்புக்கு புதிய யுகத்திற்கான புதிய சிறப்பம்சத்தைக் கொண்டு வர விரும்புகிறது என்றும் வாங்யீ கூறினார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author