சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சி.ஜி.டி.என் 3 லத்தின் அமெரிக்க சிந்தனை கிடங்குகளுடன் இணைந்து 10 லத்தின் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 2500பேரிடம் அண்மையில் கருத்து கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பின் முடிவின்படி, சீனப் பாணி நவீனமயமாக்கலின் வளர்ச்சி கண்ணோட்டம் மற்றும் சாதனைகளை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
அவர்களில் 94.8விழுக்காட்டினர் சீனா வெற்றிகரமான நாடு என கருதினர். சீனாவின் வளர்ச்சி அனுபவங்களை லத்தின் அமெரிக்க நாடுகள் பயன்படுத்தலாம் என்று 82.9விழுக்காட்டினர் கருதினர்.
மேலும், 87.2விழுக்காட்டினர் சீனப் பண்பாட்டின் செல்வாக்கை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
லத்தின் அமெரிக்க நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு கொண்டு வந்துள்ள செல்வாக்குகளை 80.4விழுக்காட்டினர் ஆக்கப்பூர்வமாக மதிப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.