2025ம் ஆண்டின் 12வது உலக விளையாட்டுப் போட்டியின் ஜூ மங் என்ற தீப உருவம், 27ம் நாள் சீனாவின் செங் து நகரில் வெளியிடப்பட்டது. வரலாற்றில் உலக விளையாட்டுப் போட்டிக்கான முதலாவது தீபம் இதுவாகும்.
72 சென்டிமீட்டர் உயரமுள்ள இந்த தீபம், சன் ஷிங் டுய் வெண்கலச் சிலை மற்றும் மூங்கில் இலைகளை உத்வேகமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது, வாழையடி வாழையாக நிலவிய சீன நாகரிகம் மற்றும் தொடர்ந்து வளரும் விளையாட்டு எழுச்சியை வெளிக்காட்டுகிறது.
உலக விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் அல்லாத மிக உயர் நிலை சர்வதேச ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டியாகும். வரும் ஆக்ஸ்ட் 7ம் நாள் முதல் 17ம் நாள் வரை சீனாவின் செங் து நகரில் இப்போட்டி நடைபெறவுள்ளது.