எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக களம் இறங்கிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி; வேலுமணிக்கு பதிலடி!

Estimated read time 0 min read

எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட பதவியை சி.வி.சண்முகத்துக்கு வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி. ஈபிஎஸ் மீது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என கூறினார்.

திருப்பூர், ஊட்டி, கோவை என மூன்று மாவட்டங்கள் உள்ள 21 தொகுதிகள் எஸ்.பி.வேலுமணி பொறுப்பில் விடப்பட்டன. ஆனால் அதில் மூன்று தொகுதிகளில் மட்டும் அதிமுக வென்றது. அவரது சொந்த மாவட்டமான கோவையில் உள்ள, தொண்டாமுத்தூரில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அவர் மீதான தவறுகளை மறைக்க இபிஎஸ் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர் என்றார்.

You May Also Like

More From Author