ஆபரண தங்கத்தின் விலை திடீர் சரிவு: சவரனுக்கு 280 ரூபாய் குறைந்தது

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,690க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,520ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,298ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,384ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ0.70 உயர்ந்து ரூ.90.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author