உலகின் கவனத்தை ஈர்க்கும் சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

உலகின் பல செய்திஊடகங்கள் சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன.

ரஷ்யாவின் தாஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ரஷிய அரசுத் தலைவர் புதின் இந்த முறை சீனப் பயணம் மேற்கொள்ளும் ஆண்டானது, சீன-ரஷிய சுமுக அண்டை நாட்டுறவுக்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை கையொப்பமிட்டப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவாகும். இந்த உடன்படிக்கை, 2001ஆம் ஆண்டில், இரு நாடுகள் கையொப்பமிட்ட மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய உடன்படிக்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் சி.என்.பி.சி நிறுவனம், ரஷிய அரசுத் தலைவருக்கான செய்தி செயலாளர் பெஸ்கோவ்வின் கூற்றை மேற்கோள் காட்டி, புதினின் சீனப் பயணத்தில் ரஷியா மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது என்று செய்தி வெளியிட்டது. புதிய யுகத்தில் சீன-ரஷிய பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கான வளர்ச்சியை இப்பயணம் மேலும் முன்னேற்றும் என்று பெஸ்கோவ் குறிப்பிட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author