சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவரும், சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைவருமான லெய் ஹாய்சாவ் 19ஆம் நாள், 79ஆவது உலகச் சுகாதாரப் பேரவைக் கூட்டத்தின் பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், உலகளாவிய சுகாதார நிர்வாக முறைமையின் சீர்திருத்தத்திற்கு உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் தலைமை தாங்க வேண்டும் என்றார். மேலும், வளரும் நாடுகளின் கருத்துகள் மற்றும் தேவைகளில் கவனம் செலுத்தி, உலக சுகாதார லட்சியத்தின் சரிசம வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் சுகாதாரத்தின் தகுநிலையை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், உலகச் சுகாதார வளர்ச்சிக்கான முதலீடுகளை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் இணைந்து கையோடு கை கோர்த்து, மனித குலத்தின் சுகாதாரம் மற்றும் நலவாழ்வுக்கான பொதுச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
