28ஆவது சீன-ஆசியான் தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 28ஆம் நாளில், சீனா மற்றும் ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் 3.0 பதிப்பு எனும் உடன்படிக்கையில் இரு தரப்பும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தின.
1991ஆம் ஆண்டு, இரு தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, சீனாவும் ஆசியானும் கூட்டு நலன் தந்து, கூட்டு வளர்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் பிரதேச வளர்ச்சிப் பாதையைத் துவங்கியுள்ளன.
புதிய உடன்படிக்கையில் கையொப்பமிடுவதன் மூலம், இப்பிரதேசத்தின் தாராள வர்த்தக மண்டலம் உயர் தரத்தில் வேகமாக வளர்ச்சியடையும். இது திறப்பு தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்துக்கு ஆசியா முன்மாதிரி தீர்வு முறையை வழங்கியுள்ளது என்று சீனாவின் தென் கிழக்காசிய ஆய்வு கழகத்தின் துணைத் தலைவரும், பீக்கிங் பல்கலைக்கழகத்தின் பேரசிரியருமான சுய்குன் தங்களது ஆய்வு கருத்துக்களைத் தெரிவித்தார்.
இவ்வாண்டின் மே திங்கள் முதல் இது வரை, ஆசியான் பொது சமூகத்திற்கான 2045 திட்டம், சீன-ஆசியான் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு பற்றிய செயல் திட்டத்திற்கான 2026-2030 பதிப்பு முதலிய வரைவுத் திட்டங்கள் முதலிய திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் எதிர்வரும் 20 ஆண்டுகாலத்தில் ஆசியானின் வளர்ச்சிக்கான புதிய இலக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
