அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த சில நாட்களில் சீனா விரைந்த புடின்  

Estimated read time 1 min read

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக செவ்வாய்க்கிழமை பெய்ஜிங் சென்றடைந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு வருகை தந்த சில நாட்களிலேயே, தனது “அன்பான நண்பர்” என்று அழைக்கப்படும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை புதின் சந்திப்பது சர்வதேச அரசியலில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் சீன வருகை இருநாட்டு பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த வேளையில், புதினின் இந்த 25-வது சீனப் பயணம் இருநாடுகளின் நீண்டகால நட்புறவை உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
உக்ரைன் போர் மற்றும் ஈரான் போர் போன்ற சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், ரஷ்யா-சீனா உறவு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக புதின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author