9-ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நிகழ்வு பிப்ரவரி 3-ஆம் நாள் முற்பகல் சீனாவின் ஹேய்லொங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரில் துவங்கியது. இந்தத் தீபத் தொடரோட்ட நெறியின் மொத்த நீளம் சுமார் 11 கிலோமீட்டராகும். 120 தீப ஓட்ட வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர்.
பிப்ரவரி 7-ஆம் நாளிரவு நடைபெறவுள்ள ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் தீப் பந்தக் கோபுரம் பற்றவைக்கப்படும். மேலும், நடப்பு ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் ஐஸ் ஹாக்கி போட்டி 3-ஆம் நாள் முற்பகல் 9 மணிக்கு துவங்கியது.