2026-ல் பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி கோபால் திரிவேதி பற்றி நீங்கள் அறியவேண்டியவை  

Estimated read time 1 min read

புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், ராஜேந்திர வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் கோபால் ஜி திரிவேதிக்கு, மறைவுக்குப் பின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.
பீகாரில் வேளாண் கல்வி, விவசாயிகளை மேம்படுத்துதல், மீன் சார்ந்த பண்ணை முறைகள், மக்காச்சோள உற்பத்தித்திறன் மேம்பாடு மற்றும் அறிவியல் பூர்வமான லிச்சி சாகுபடி ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது, மே 25 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பத்ம விருதுகள் 2026 விழாவில் வழங்கப்படும்.

கோபால் ஜி திரிவேதி யார்?

பீகார் மாநிலத்தின் முசஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
சிறுவயதிலேயே கல்வியில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்.
பின்னர் வேளாண் கல்வியில் உயர்கல்வி பெற்று, இந்தியாவின் முக்கிய வேளாண் ஆய்வாளர்களில் ஒருவராக உயர்ந்தார்

அவர் செய்த முக்கிய சாதனைகள்
லிச்சி மற்றும் மகானா விவசாயத்தில் புரட்சி
பீகாரின் பிரபலமான லிச்சி (Lychee) மற்றும் மகானா (Makhana) பயிர்களில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வந்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவினார்.
பழைய லிச்சி தோட்டங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் canopy management முறையை பரப்பியதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

ஒருங்கிணைந்த விவசாய முறை
வெள்ளப்பாதிப்பு அதிகமான பகுதிகளில் மீன்வளம், மகானா மற்றும் பிற பயிர்களை ஒருங்கிணைத்து செய்யும் முறைமையை உருவாக்கி, விவசாயிகளுக்கு புதிய வருமான வாய்ப்புகளை ஏற்படுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author