ஆண்டின் தொடக்கத்தில் வலுவான மீட்சியுடன் காணப்படும் சீனப் பொருளாதாரம்

Estimated read time 0 min read

இவ்வாண்டின் வசந்த விழா விடுமுறையில், சீனாவில் பல நுகர்வுத் தரவுகள் 2019ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளன.

இதன் தொடர்பில் சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என்னும் சீன ரென்மின் பல்கலைக்கழகமும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்களில் 93.1 சதவீதமானோர் சீனப் பொருளாதாரத்தின் வலிமை மற்றும் உள்ளார்ந்த திறனை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

2023ஆம் ஆண்டு முதல், சீனாவின் பொருளாதாரம் வலுவான மீட்சி போக்கைக் காட்டியுள்ளது. அந்த ஆண்டிற்கான அனைத்து முக்கிய எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளும் வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளன.

அவற்றில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2022ஆம் ஆண்டை விட 5.2 சதவீதம் அதிகரித்து, உலகின் முக்கிய நாடுகளில் முன்னணியில் உள்ளது.

வலுவாக மீட்சியடைந்த சீனாவின் பொருளாதாரம் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெரிதும் உயர்த்தியுள்ளது. சர்வதேச நிதி மன்றத்தின் அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் உலகின் முக்கிய நாடுகளில் முன்னணியில் உள்ளது என்றும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்களிப்பு 32 சதவீதத்தை எட்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author