பின்லாந்து அரசுத் தலைவர் ஸ்டூப் 5ம் நாள் டேர்கு நகரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீயுடன் பேச்சுவர்த்தை நடத்தினார்.
ஸ்டூப் கூறுகையில், தற்போதைய சர்வதேச நிலைமை முக்கியமான குறுக்கு சந்தியில் நிற்கிறது. சீனா, உலகிற்கு மதிப்புள்ள நிலைத்தன்மையை ஊட்டியுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த 4 உலகளாவிய முன்மொழிவுகள், சர்வதேச சமூகத்துக்கு மைல் கல் வாய்ந்த தலைமை முக்கியத்துவம் அளித்து வருகின்றன என்று தெரிவித்தார்.
வாங்யீ அப்போது கூறுகையில், பின்லாந்துடன் இணைந்து, எதிர்காலம் நோக்கும் புதிய ரக ஒத்துழைப்புக் கூட்டாளியுறவில் ஊன்றி நின்று, இரு நாட்டுத் தலைவர்களின் நெடுநோக்கு தலைமையில், ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு, சவால்களைக் கூட்டாக எதிர்கொள்ள சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
