சீனாவின் தியான்வென்-2 விண்வெளி ஆய்வு கலம், கடந்த 400 நாட்களாக, சுமார் 100 கோடி கிலோமீட்டர் தூரப் பயணம் மேற்கொண்ட பிறகு, அண்மையில் 2016HO3 என்னும் சிறுகோளிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தைச் சென்றடைந்து, அறிவியல் ஆய்வுப் பணியை மேற்கொள்ளத் துவங்கியது.
தியான்வென்-2 விண்வெளி ஆய்வு கலம், 2025ஆம் ஆண்டு மே 29ஆம் நாள் சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து ஏவப்பட்டது.
அடுத்த கட்டத்தில், இந்த ஆய்வு கலம், மேலும் துல்லியமான அறிவியல் ஆய்வின் மூலம், இந்தச் சிறுகோளின் தோற்றம், பொருள் அமைப்பு, உள் கட்டமைப்பு உள்ளிட்ட தகவல்களைப் பெற்று, மாதிரிகளின் சேகரிப்புக்கு தயாரிப்பு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
