சந்திரயான்-3 சாதனை: அமெரிக்காவின் புகழ்பெற்ற 2026 கோடார்ட் விண்வெளி விருது இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டது  

Estimated read time 1 min read

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம், விண்வெளித்துறையில் உலகளவில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 2026 கோடார்ட் விண்வெளி விருதை (Goddard Astronautics Award) வென்று சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற மாநாட்டில் இந்த விருது அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
நிலவின் தென்துருவத்தில் முதல் முறையாக வெற்றிகரமாகத் தரையிறங்கி, உலக விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டியதற்காக இஸ்ரோவுக்கு இந்த சர்வதேச கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் வினய் குவாத்ரா இந்த விருதை இஸ்ரோவின் சார்பில் நேரில் பெற்றுக்கொண்டார்.

You May Also Like

More From Author