முக்கூடல் ஸ்ரீ முத்துமாலை அம்பாள் கோயில் கொடியேற்று விழா

Estimated read time 0 min read

அம்பை ஜூலை 6

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாலை அம்பாள் திருக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

இன்று காலை கணபதி ஹோமம், தாமிரபரணி நதிக்கரையில் இருந்து அம்பாள் தீர்த்தவாரி முகூர்த்தக்கால் நடும் விழா, கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

இதில் திருக்கோயில் அறங்காவலர்
குழு தலைவர் கதிரேஷ் ராம்சேட், செயலாளர் லெட்சுமி நாராயணன், பொருளாளர் விநாயக முத்துகிருஷ்ணன் உட்பட திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் முக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள் சுவாமி அம்பாள் வீதி உலா மற்றும் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை
ஸ்ரீ முத்துமாலை அம்பாள் திருக்கோவில் அறங்காவலர் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

You May Also Like

More From Author