இந்தியர்களுக்கு விசா இல்லா சலுகை அதிரடியாக ரத்து!

Estimated read time 1 min read

தென் கிழக்காசிய நாடான தாய்லாந்து, சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், 2024 ஜூலையில், இந்தியா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு, 60 நாட்கள் விசா இல்லாத திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதை பயன்படுத்தி, பல வெளிநாட்டினர் சட்டவிரோத வியாபாரம், போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பை கருதி, வெளிநாட்டவர் 60 நாட்கள் விசா இல்லாமல் தங்கும் அனுமதியை தாய்லாந்து அரசு ரத்து செய்துள்ளது. புதிய விதிகளின்படி, தாய்லாந்து செல்லும் இந்தியர்கள், இனி விசா இல்லாமல் நுழைய முடியாது.’விசா ஆன் அரைவல்’ அல்லது ஆன்லைன் வழியாக இ – விசாவுக்கு விண்ணப்பித்து பெற வேண்டும்.

இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் வரை, தாய்லாந்துக்கு ஏற்கனவே வந்த வெளிநாட்டவர், பழைய விதிகளின்படி, 60 நாட்கள் வரை தங்கலாம் என, அந்நாட்டு அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

You May Also Like

More From Author